பாலாறு பாலத்தில் மின் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
செங்கல்பட்டு:சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலை தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலை. இதில் செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் - இருங்குன்றம் பள்ளி இடையே பாலாற்றில் மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.மேலும் வாகன ஓட்டிகள் வசதிக்காக இருபுறமும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பாலத்தில் தாம்பரம் மார்க்கத்தில் உள்ள பாலத்தில் 25க்கும் மேற்பட்ட கம்பங்களில் உள்ள ஒரு மின் விளக்குகள் பல மாதங்களாக மின் விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகின்றனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த மேம்பாலத்தை ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இரவில் விளக்குகள் எரியாததால் பாலத்தில் உள்ள 'பேச் ஒர்க்' செய்யப்பட்டு உள்ளது தெரியாததால் தடுமாறி விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் பாலத்தில் விபத்தில் சிக்கிய வாகனங்களின் உடைந்த பாகங்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பாலத்தில் உள்ள மின் விளக்குகளை பழுது நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.மின் விளக்கு அமைக்க கோரிக்கைதிருப்போரூர் -- செங்கல்பட்டு சாலை 27 கி.மீ., உள்ளது. இந்த சாலை இடையே எடையான்குப்பம், மடையத்துார், செம்பாக்கம், கொட்டமேடு, வெங்கூர், கரும்பாக்கம் உள்ளிட்ட பல கிராமங்கள் உள்ளன. இரு வழிப்பாதையாக இருந்த இச்சாலை, 117 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்கள் செல்லும் இச்சாலையில் குறிப்பாக திருப்போரூர் முதல் கொட்டமேடு வரை சாலை இருபுறமும் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது.இங்கு சாலையில் மின்விளக்கு வசதி இல்லாததால், இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்கள் நடைபெறும் அபாயம் ஏற்படுகிறது. மேலும், செம்பாக்கம், கொட்டமேடு பகுதிகளில் சாலை நடுவே திடீர் செவ்டர் மீடியன் இருப்பதால் அடிக்கடி அதில் மோதி விபத்துக்களும் நடைபெறுகிறது.எனவே, இச்சாலையில் மின் விளக்குகள் அமைக்க அந்தந்த பகுதி ஊராட்சி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகளிடையே கோரிக்கை எழுந்துள்ளது.