வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சாலை துறை என்பது இருக்கிறதா ? வடிவேலு சொன்னா மாதிரி "எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் "
மேலும் செய்திகள்
வெள்ளோடை- ஆண்டார்குப்பம் சாலை சேதம்
19-Oct-2024
மறைமலைநகர்:திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலை தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.இந்த சாலையில் பாலாற்றின் குறுக்கே, செங்கல்பட்டு - பழவேலி -- மாமண்டூர் மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் சாலையின் நடுவே இருபுறமும் அதிகளவில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:மேம்பாலத்தில் உள்ள பள்ளங்களில் மேம்பால கட்டுமான இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன.இதன் காரணமாக, உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுவதோடு, பலர் உடலுறுப்புகள் இழந்து மருத்துவ செலவு மற்றும் வாகனங்கள் பழுது நீக்கும் செலவு என, பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.அதிக பள்ளங்களால் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை மெதுவாக இயக்குவதால், வார இறுதி நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.மேம்பாலம் முழுதும் மணல் திட்டுக்கள், ஜல்லிக் கற்கள் பரவலாக கிடப்பதால், அவை வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. மேலும், மேம்பால தூண்களில் செடிகள் வளர்ந்து வருவதால், மேம்பாலத்தின் உறுதி தன்மைக்கு கேள்விக்குறியாகி உள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் இவற்றை கண்டும் காணாமல் உள்ளனர்.எனவே, சேதமடைந்த மேம்பாலத்தை முறையாக பராமரிக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
சாலை துறை என்பது இருக்கிறதா ? வடிவேலு சொன்னா மாதிரி "எவ்வளவு அடித்தாலும் தாங்குவார்கள் "
19-Oct-2024