சகதியான கொண்டமங்கலம் சாலை வாகன ஓட்டிகள் தவிப்பு
கா ட்டாங்கொளத்துார் ஒன்றியம், கொண்டமங்கலம் ஊராட்சியில், 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் இருந்து கோவிந்தாபுரம் -- கொண்டமங்கலம் செல்லும் சாலை 3.3 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் உள்ளன. இருபுறமும் கழிவுநீர் செல்ல வழி இல்லாததால், சாலையில் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி உள்ளது. மேலும், சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலை நடுவே தேங்கி நின்று துர்நாற்றம் வீசுகிறது. இந்த பகுதியில் மழைநீர் செல்லும் கால்வாயை பலர் ஆக்கிரமிப்பு செய்து, மாட்டுசாணம் கொட்டி, தண்ணீர் வெளியேற முடியாதபடி செய்து உள்ளனர். இந்த சாலையை சீரமைக்க பலமுறை கோரிக்கைகள் வைத்தும், இதுவரை சீரமைக்கப்படவில்லை. கொண்டமங்கலம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - சங்கரமகாலிங்கம், காட்டாங்கொளத்துார்.