என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நாடகம்
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சியில், 30 வார்டுகள் உள்ளன. வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நகராட்சி துாய்மை பணியாளர்கள் வீடுகள்தோறும் சென்று, குப்பையை சேகரித்து வருகின்றனர்.இந்நிலையில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, துாய்மை நகருக்கான மக்கள் இயக்கம் மற்றும் நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி இணைந்து, 'என் குப்பை என் பொறுப்பு' என்பதை வலியுறுத்தியும், பிளாஸ்டிக்கை ஒழிப்பது குறித்தும், நாடகம் வாயிலாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நேற்று காலை, நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் முன்னிலையில், வெங்கடாஜலபதி நாடக சபா சார்பில், நாடக கலைஞர்கள் நடனமாடியும், நடித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.