தேசிய சீனியர் தடகளம் நாளை துவக்கம்
சென்னை, தேசிய சீனியர் தடகளப் போட்டி, சென்னையில் நாளை துவங்கி, 24ம் தேதி வரை நடக்கிறது. தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், 64வது தேசிய தடகளப் சாம்பியன்ஷிப் போட்டி, நாளை துவங்கி 24ம் தேதி வரை நடக்கிறது. போட்டிகள், சென்னை, பெரியமேடு, நேரு விளையாட்டு அரங்கில் நடக்கிறது. எஸ்.டி.ஏ.டி., ஆதரவில் நடக்கும் இப்போட்டிகளில், 35 அணிகளைச் சேர்ந்த, 700க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் பங்கேற்கின்றனர். தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல், வித்யா ராமராஜ், அபிநாய ராஜராஜன், டி.கே.,விஷால், ஏஞ்சல் சில்வியா, மற்ற மாநிலங்களைச் சேர்ந்த தஜிந்தர்பால் சிங், தேஜஸ்வின் சங்கர் உள்ளிட்ட முக்கிய வீரர் - வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர் என, சங்கத்தின் செயலர் லதா தெரிவித்துள்ளார்.