தேசிய சர்பிங் சாம்பியன்ஷிப் போட்டி
திருப்போரூர்:தமிழ்நாடு சர்பிங் சங்கம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து 'கோவ் லாங் - வாட்டர் பெஸ்டிவல் 2025' எனும் கடற்சார் விளையாட்டு போட்டிகள், சென்னை, கோவளத்தில் கடந்த 18ம் தேதி துவங்கின. இதில் 16 வயதுக்கு உட்பட்டோர், ஓப்பன் என நான்கு பிரிவுகளில் போட்டி நடந்தது. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 94 பேர் பங்கேற்றனர். நேற்று நடந்த நிறைவு விழாவில், வெற்றி பெற்றவர்களுக்கு, செங்கல்பட்டு மாவட்ட சப்- - கலெக்டர் மாலதி ஹெலன், திருப்போரூர் தாசில்தார் சரவணன், கோவளம் ஊராட்சி தலைவர் சோபனா தங்கம், இந்திய சர்பிங் பெடரேஷன் தலைவர் அருண் வாசு, சுற்றுலா அலுவலர் சக்திவேல் உள்ளிட்டோர் பரிசு, சான்றிதழ் வழங்கினர்.