உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இயற்கை மருத்துவ விழிப்புணர்வு

இயற்கை மருத்துவ விழிப்புணர்வு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் சார்பில், தேசிய இயற்கை மருத்துவ தினத்தையொட்டி, இயற்கை மருத்துவ விழிப்புணர்வு நடத்த, பொறுப்பு இயக்குனர் வெங்கடேஷ்வரன் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகில், இயற்கை மருத்துவ விழிப்புணர்வு பேரணியை, தாலுகா காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, நேற்று முன்தினம் துவக்கி வைத்தார்.இதில், இயற்கை மருத்துவ பிரிவு துறைத்தலைவர் பாண்டியராஜா, நிலைய மருத்துவ அலுவலர்கள் பங்கேற்றனர். இங்கு துவங்கிய பேரணி, ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்று, சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனம் அருகில் முடிந்தது.இதில், 300க்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை மருத்துவ மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !