கல்லுாரி மாணவர்களுக்கு புது இருக்கைகள் ஏற்பாடு
செய்யூர்:புதிதாக துவக்கப்பட்டுள்ள செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வரும் 30ம் தேதி வகுப்புகள் துவக்கப்பட உள்ள நிலையில், மாணவ - மாணவியர் அமர, 63 புதிய இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.செய்யூர் வட்டத்தில், புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கடந்த மாதம் துவக்கப்பட்டது.இந்த கல்வி ஆண்டிற்கு, ஐந்து பாடப் பிரிவுகளின் கீழ், 270 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன, இதில், மூன்று கட்டங்களாக கலந்தாய்வுகள் நடந்து வருகின்றன.கலந்தாய்வுகள் நிறைவடைந்து, வரும் 30ம் தேதி கல்லுாரி வகுப்புகள் துவக்கப்பட உள்ள நிலையில், செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ., நிதியில் மாணவ - மாணவியர் வகுப்பறையில் அமர, 63 புதிய இருக்கைகள் கல்லுாரிக்கு வழங்கப்பட்டு உள்ளன.