உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடுக்கலுாரில் புது அங்கன்வாடி கட்டுமான பணிகள் விறுவிறு

கடுக்கலுாரில் புது அங்கன்வாடி கட்டுமான பணிகள் விறுவிறு

செய்யூர், ஏப். 1 -நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியாக, கடுக்கலுாரில் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.சூணாம்பேடு அருகே கடுக்கலுார் கிராமத்தில், அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இந்த அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தைகள் ஆரம்ப கல்வி படித்து வருகின்றனர்.மேலும் கர்ப்பிணியர் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் என, 30க்கும் மேற்பட்டோர் இணை உணவு மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனையால் பயனடைந்து வருகின்றனர்.பழைய அங்கன்வாடி மைய கட்டடம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், நாளடைவில் பழுதடைந்தது.முன்னெச்சரிக்கையாக, 3 ஆண்டுகளுக்கு முன் இ-சேவை மையத்திற்கு அங்கன்வாடி மையம் மாற்றப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது.இங்கு குடிநீர், கழிப்பறை வசதி மற்றும் போதிய இடவசதியின்றி குழந்தைகள் அவதிப்படுகின்றனர்.அதனால், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, ஊராட்சி கனிம வள நிதியில் இருந்து 13.5 லட்சம் ரூபாயில், புதிய அங்கன்வாடி மைய கட்டடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி