உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் இருந்த பள்ளங்கள் தார் கலவையால் சீரமைப்பு

சாலையில் இருந்த பள்ளங்கள் தார் கலவையால் சீரமைப்பு

கூடுவாஞ்சேரி, :செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியிலிருந்து நெல்லிக்குப்பம் வரையிலான 11 கி.மீ., துார சாலை உள்ளது.இதில், கூடுவாஞ்சேரி முதல் காயரம்பேடு வரையிலான 6.6 கி.மீ., சாலையில், 30க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை பெயர்ந்து, குண்டும் குழியுமாக காட்சியளித்தது.இதனால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன், விபத்து அச்சத்துடன் பயணிக்கும் சூழல் நிலவி வந்தது.பள்ளங்கள் அருகே வரும் போது, வாகன ஓட்டிகள் வேகத்தை குறைப்பதால், பின்னால் வரும் வாகனங்கள் மோதி, அடிக்கடி விபத்துகளும் நடந்தேறின.இது குறித்து நம் நாளிதழ் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, கடந்த ஒரு வாரமாக சாலையில் இருந்த பள்ளங்கள் அனைத்தும், தார் கலவையால் மூடப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி