மேலும் செய்திகள்
லாரி ஏறியதில் மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
18-Dec-2024
திருப்போரூர்:கேளம்பாக்கம் அடுத்த சிறுசேரி சிப்காட் அருகே, நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணியளவில், சாலை ஓரத்தில் சிறுவன் ஒருவன் தலை நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.பின், விபத்து குறித்து விசாரித்ததில், இறந்து கிடந்த சிறுவன், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த திவ்யான்,16, என்பதும், கேளம்பாக்கம் அடுத்த கழிப்பட்டூர் பகுதியில் தங்கி, மெக்கானிக் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.நேற்று முன்தினம் நள்ளிரவு, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி இறந்தது தெரிந்தது. பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
18-Dec-2024