உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தமிழ் தெரியாத வடமாநில அதிகாரி திருப்போரூர் தபால் ஆபீசில் திணறல்

தமிழ் தெரியாத வடமாநில அதிகாரி திருப்போரூர் தபால் ஆபீசில் திணறல்

திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவில், மேற்கு உள் மாடவீதியில், துணை தபால் நிலையம் செயல்படுகிறது.இங்கு துணை தபால் அலுவலர், உதவியாளர், தபால்காரர் உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர்.சேமிப்பு கணக்கு மற்றும் பல திட்டங்களில் இணைந்துள்ள வாடிக்கையாளர்கள் ஆயிரக்கணக்கானோர், இந்த தபால் நிலையத்திற்கு வருகின்றனர்.இதுதவிர அஞ்சல், பதிவு தபால் உள்ளிட்ட சேவைகளுக்காகவும் பலர் வருகின்றனர்.இங்குள்ள துணை தபால் அலுவலர் பிரிவில், தமிழ் மொழி தெரியாத வடமாநிலத்தவர் ஒருவர், துணை தபால் அலுவலராக பணியில் உள்ளார்.இவருக்கு, தமிழ் மொழி தெரிந்த ஒருவர் உதவியாளராக இருந்து வருகிறார்.கடந்த இரண்டு நாட்களாக தமிழ் தெரிந்த உதவியாளர் விடுமுறையில் சென்றதால், துணை தபால் அலுவலருக்கும் மக்களுக்கும் இடையே, தகவல் பரிமாற்றத்தில் சிக்கல் ஏற்படுகிறது. அங்குள்ள தபால்காரர்களே, வாடிக்கையாளர்களுக்கு உதவி வருகின்றனர்.இதனால், தபால் சேமிப்பு கணக்கு துவங்குதல் உள்ளிட்ட பல பணிகளும் பாதிக்கப்படுவதாக, வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, திருப்போரூர் துணை தபால் நிலையத்திற்கு, தமிழ் மொழி தெரிந்த ஒருவரை துணை தபால் அலுவலராக நியமிக்க வேண்டுமென, வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை