மேலும் செய்திகள்
8 கிலோ கஞ்சா பறிமுதல் வடமாநில வாலிபர் கைது
30-May-2025
கூடுவாஞ்சேரி:செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில், வட மாநில கூலி தொழிலாளர்களை குறிவைத்து, கஞ்சா விற்பனை நடப்பதாக தகவல் வர, போலீசார் தீவிர கண்காணிப்பிலும், ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் காலை, கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகே, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.அந்த வாலிபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், அவரிடமிருந்த உடைமைகளை போலீசார் சோதனை செய்தனர். அதில் 3 கிலோ கஞ்சா இருந்தது.அந்த வாலிபரை, கூடுவாஞ்சேரி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, அவர் மேற்கு திரிபுரா, செப்பிஜாலா மாவட்டம், தெற்கு பாரபூர் கிராமத்தைச் சேர்ந்த இக்பால் உசேன், 24, என தெரிந்தது.இதையடுத்து, இக்பால் உசேன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில், நேற்று முன்தினம் இரவு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
30-May-2025