ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் செங்கையில் இன்று துவக்கம்
செங்கல்பட்டு:சென்னையில், வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை, முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். இத்திட்டம், செங்கல்பட்டு மாவட்டத்திலும் செயல்படுத்தப்படுகிறது.https://x.com/dinamalarweb/status/1941002494601318572வேளாண்மை இணை இயக்குநர் பிரேம்சாந்தி அறிக்கை:தமிழகத்தில், ஊட்டச்சத்து வேளாண்மை எனும் புதிய திட்டம், 2025 - 26ம் ஆண்டு, 125 கோடி ரூபாயில் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இதில், காய்கறிகள் விதைத்தொகுப்பு, பழச்செடிகள் தொகுப்பு மற்றும் பயறு வகை விதை தொகுப்பு நுாறு சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.இத்திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னையில், வீடியோ கான்பரன்ஸ் மூலமாக துவக்கி வைக்கிறார்.செங்கல்பட்டு மாவட்டத்தில், 3,000 பயனாளிகளுக்கு பயறு வகை விதை தொகுப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.மேலும், தோட்டக்கலைத் துறை மூலமாக காய்கறி விதைகள், பழக்கன்றுகள் தொகுப்புகளும் வழங்கப்பட உள்ளன. வீடுகளில் நடவு செய்ய ஏதுவாக இடம் உள்ளவர்கள் மற்றும் விவசாயிகள் உழவர் செயலியில் பதிவு செய்து, பயறு வகை விதை தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக ஆதார் அல்லது குடும்ப அட்டை நகல்களுடன், அருகில் உள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி பயன் பெறலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில், வேளாண்மை ஊட்டசத்து இயக்க திட்ட சிறப்பு முகாம், எட்டு வட்டாரங்களில் இன்று நடக்கிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.