உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இறைச்சி வியாபாரத்திற்காக ஊராட்சி ஆபீஸ் ஆக்கிரமிப்பு

இறைச்சி வியாபாரத்திற்காக ஊராட்சி ஆபீஸ் ஆக்கிரமிப்பு

கடலுார் : கூவத்துார் அடுத்த கடலுாரில், ஊராட்சி அலுவலக வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில், ஊராட்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், துணை சுகாதார நிலையம் ஆகியவை இயங்குகின்றன.இந்த அலுவலக வளாகத்தில், மேல்நிலை குடிநீர் தொட்டியும் உள்ளது. இவ்வளாகம், பிரதான சாலையை ஒட்டியுள்ளது.அதனால், வழக்கமாக வேறு இடத்தில் கோழி இறைச்சி வியாபாரம் செய்த அப்பகுதியை சேர்ந்த ஒருவர், தற்போது ஊராட்சி அலுவலக வளாக பகுதியில், இறைச்சி வியாபாரம் செய்கிறார்.இப்பகுதியில் இறைச்சி வியாபாரம் செய்ய, உள்ளாட்சி பிரதிநிதிகளும், வியாபாரிக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறப்படுகிறது.அதனால், அப்பகுதிவாசிகளின் எதிர்ப்பையும் மீறி, ஊராட்சி அலுவலக வளாகத்திற்குள், சுற்றுச்சுவரை ஒட்டியே கடை அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, ஊராட்சி அலுவலகம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தும் அப்பகுதிவாசிகள், மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை