உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு

விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவு

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் தாலுகாவில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், கூடுதல் கலெக்டர் நாராயணசர்மா உள்ளிட்ட அதிகாரிகள், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.இதைத்தொடர்ந்து, பொன்விளைந்தகளத்துாரில், ஜன்மன் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் இருளர் குடியிருப்புகள் மற்றும் பொன்பதர்கூடம், எடையூர் ஆகிய கிராமங்களில், ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கீரின் தமிழ்நாடு மிஷன் நர்சரி தோட்டத்தில் உள்ள மரக்கன்றுகளை, கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு செய்தார். இந்த மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து, விவசாயிகள் மற்றும் மரம் வளர்ப்போருக்கு வழங்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.கொத்திமங்கலம் ஊராட்சியில் நரிக்குறவர் பகுதியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்கும் பணி, புதுப்பட்டினம் இ.சி.ஆரில் சாலையில் பாலப் பணி ஆகியவற்றை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டது. புதுப்பட்டினம் மீனவர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள துாண்டில் வளைவுகள் குறித்தும் கலெக்டர் விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை