உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பழைய வாகனங்கள் வரும் 31ல் ஏலம்

பழைய வாகனங்கள் வரும் 31ல் ஏலம்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்கள், வரும் 31ம் தேதி ஏலம் விடப்படுகின்றன. இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை வெளியிட்ட அறிக்கை: செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், வரும் 31ம் தேதி காலை 10:30 மணியளவில், செங்கல்பட்டு மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளன. இந்த பொது ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், காலை 10:00 மணிக்கு, முன் பணமாக 1,000 ரூபாய் செலுத்தி, ரசீது பெற்று ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும், ஏலம் எடுப்பவர்கள், ஏலத்தொகையுடன் 18 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியும் உடனே செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட ஆயுதப்படை அலுவலக தொலைபேசி எண்கள் 94981 46628 - 88254 65897 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை