உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கார் மீது டிராக்டர் மோதி ஒருவர் பலி; 4 பேர் சீரியஸ்

கார் மீது டிராக்டர் மோதி ஒருவர் பலி; 4 பேர் சீரியஸ்

திருத்தணி : ஸ்ரீபெரும்புதுார் ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் சுதாகர், 44; தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று மதியம், 'வோக்ஸ்வாகன் - போலோ' காரில், மனைவி கோதைநாயகி, மகள் தக் ஷனா, 18, மகன் சுதர்சன், 13, ஆகியோருடன் திருப்பதி கோவிலுக்கு செல்வதற்கு, திருவள்ளூர் வழியாக திருத்தணி நோக்கி சென்று கொண்டிருந்தார்.காரை சுதாகர் ஓட்டி வந்தார். மாலை 3:30 மணிக்கு, திருத்தணி அரசு கலைக் கல்லுாரி அருகே வந்தபோது, எதிரே திருத்தணியில் இருந்து, திருவாலங்காடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வந்த டிராக்டர், கார் மீது மோதியது.இதில், சுதாகர், கோதைநாயகி, தக்க்ஷனா, சுதர்சன் மற்றும் டிராக்டர் ஓட்டுநரும் காயம் அடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள், அனைவரையும் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சுதாகர் உயிரிழந்தார். மற்ற நான்கு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !