உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை அருகே பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி

செங்கை அருகே பைக் மீது லாரி மோதி ஒருவர் பலி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே, பைக்கில் சென்றவர் மீது டிப்பர் லாரி மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.செங்கல்பட்டு அடுத்த மேலைமையூர், கோழிப்பண்ணை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரசேகர், 35.இவர், செங்கல்பட்டு சுற்றுப் பகுதிகளில் உள்ள மொபைல் போன் பழுது நீக்கும் கடைகளுக்கு, மொபைல் போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்தார்.நேற்று மதியம், மகேந்திரா சிட்டியில் இருந்து,'பஜாஜ் பல்சர்' பைக்கில், ஜி.எஸ்.டி., சாலை வழியாக செங்கல்பட்டு நோக்கி வந்து கொண்டிருந்தார்.பரனுார் சுங்கச்சாவடி அடுத்த ராஜகுளிப்பேட்டை அருகே வந்த போது, பின்னால் வந்த டிப்பர் லாரி ஒன்று, இவரது பைக்கில் மோதியது. இதில் சுந்தரசேகர் படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், அவரது உடலை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து காரணமாக ஜி.எஸ்.டி., சாலையில், சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி