உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பைக் விபத்தில் ஒருவர் பலி

பைக் விபத்தில் ஒருவர் பலி

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த அருங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் திருமலை, 40. இவரின் அண்ணன் மனைவி ஜெயந்தி, 37.இவர்கள், நேற்று முன்தினம் மாலை, உறவினரின் வீட்டிற்கு சென்றுவிட்டு, திருப்போரூர் - -திருக்கழுக்குன்றம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.அப்போது அழகுநத்தம், எம்.ஜி.ஆர்., நகர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, பலத்த மழை பெய்ததால் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.இதில், திருமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஜெயந்திக்கு லேசான காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக மானாமதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், திருமலை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, மானாமதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி