மேலும் செய்திகள்
இந்திய நாட்டிய விழா மாமல்லையில் துவக்கம்
22-Dec-2024
மாமல்லபுரம் : இந்திய நாட்டிய விழாவில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட கலைக்குழுக்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.தமிழக சுற்றுலாத்துறை சார்பில் ஆண்டுதோறும், மாமல்லபுரத்தில் இந்திய நாட்டிய விழா நடத்தப்படுகிறது. விழாவில் பரதம், கதகளி, ஒடிசி உள்ளிட்ட நாட்டியங்கள் மற்றும் கரகம், காவடி உள்ளிட்ட நாட்டுப்புற கலைகள் நிகழ்த்தப்படுகின்றன.இதில் கலை நிகழ்ச்சி நடத்த பெரும்பாலும், பிற மாவட்ட, வெளிமாநில கலைக்குழுக்களுக்கே வாய்ப்பு அளிக்கப்படும். நிகழ்ச்சி நடக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த குழுக்களுக்கும் வாய்ப்பளிக்க வலியுறுத்தப்பட்ட நிலையில், இப்பகுதி குழுக்களுக்கும் தற்போது வாய்ப்பு அளிக்கப்படுகிறது.கடந்த டிச., 22ம் தேதி முதல் நடக்கும் இவ்விழாவில், கடந்த 2ம் தேதி செங்கல்பட்டு, நடேசா நாட்டியாலயா குழுவினரும், நேற்று, மாமல்லபுரம் ஸ்ரீநிருத்யா தீக் ஷா குழுவினரும், பரதநாட்டியம் நிகழ்த்தினர்.அதைத்தொடர்ந்து வரும் 11ம் தேதி காஞ்சிபுரம், காஞ்சி சிலம்பாட்ட குழுவினரின் நாட்டுப்புற கலை, 12ம் தேதி செங்கல்பட்டு, நிருத்யகலா வைபவம் சரஸ்வதி நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டியம் நடக்கிறது.17ம் தேதி, செங்கல்பட்டு விநாயகா நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டியம் நடத்த, சுற்றுலாத்துறை வாய்ப்பளித்து உள்ளது.
22-Dec-2024