உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உள்ளாட்சி பகுதிகளில் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு

உள்ளாட்சி பகுதிகளில் திட்டப்பணிகள் விரைந்து முடிக்க உத்தரவு

செங்கல்பட்டு, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக, மக்கள் குறைதீர்க்கும் கூட்ட அரங்கில், மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டம், கண்காணிப்பாளர் ராகுல்நாத் தலைமையில், நேற்று நடந்தது.சப்- கலெக்டர் நாராயணசர்மா, தாம்பரம் மாநகராட்சி ஆணையாளர் பாலச்சந்தர், கூடுதல் கலெக்டர் அனாமிகா, மாவட்ட வன அலுவலர் ரவி மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், தாம்பரம் மாநகராட்சி, செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர் நகராட்சி, நந்திவரம் கூடுவாஞ்சேரி ஆகிய நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் உள்ளிட்ட அனைத்துதுறைகள் பணிகள் குறித்து, ஆய்வு செய்யப்பட்டது. அதன்பின், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில், திட்டப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, நான்கு மாதங்களுக்கு மேலாக பணிகள் துவக்கப்படாமல் உள்ளன. இப்பணிகளை ஐந்து மாதங்களுக்குள் முடிக்க, அதிகாரிகள் ஈடுபட வேண்டும். மற்றத்துறையினரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.திட்டப்பணிகளில் துவங்குவதில், பிரச்னை இருந்தால், கலெக்டர் கவனத்திற்கு கொண்டு சென்று, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு, கண்காணிப்பு அலுவலர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை