ஓதியூர் ஏரி இறால் இ.சி.ஆரில் விற்பனை
செய்யூர்:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஓதியூர் கிராமத்தில் 275 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது.சுமார் 20க்கும் மேற்பட்ட ஏரியில் இருந்து வெளியேரும் உபரிநீர், ஓதியூர் ஏரிக்கு வந்து சேர்ந்து பின் பக்கிங்காம் கால்வாய் வழியாக வங்கக் கடலில் கலக்கிறது. கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் ஏரி முழு கொள்ளவை எட்டி உள்ளது.தற்போது ஏரியில் இறால் உற்பத்தி அதிக அளவில் உள்ளதால், கூவத்துார், மரக்காணம், செய்யூர் உள்ளிட்ட பகுதி மீனவர்கள் ஏரியில் உள்ள சேற்றில் கையால் தடவி இறால் பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.இங்கு பிடிக்கப்படும் இறால், கிழக்கு கடற்கரை சாலை ஓரத்தில் நேரடியாக விற்பனை செய்கின்றனர். கிலோ 200 முதல் 400 வரை விற்கப்படுகிறது.குறைந்த விலையில் கலப்படம் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்வதால் , வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.