உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நம்ம டாய்லெட் மோட்டார் பழுது -

நம்ம டாய்லெட் மோட்டார் பழுது -

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது. இதில், 19ஆவது வார்டுக்கு உட்பட்ட கடப்பேரி, வெண்காட்டீஸ்வரர் கோவில் அருகே, பல லட்சம் ரூபாய் மதிப்பில், நம்ம டாய்லெட் கட்டப்பட்டது.இதில், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக, நம்ம டாய்லெட் கழிப்பறைக்கு, தண்ணீர் ஏற்றும் மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளது.இதனால், மோட்டார் பழுதை நீக்கி, பயன்பாட்டிற்கு கொண்டு வர, நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை