உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இழுத்து கட்டப்படும் தனியார் கேபிள்கள் வலுவிழந்து சாயும் மேம்பால மின் கம்பம்

இழுத்து கட்டப்படும் தனியார் கேபிள்கள் வலுவிழந்து சாயும் மேம்பால மின் கம்பம்

தாம்பரம்:தாம்பரத்தில், முடிச்சூர் - ஜி.எஸ்.டி., - வேளச்சேரி சாலைகளை இணைக்கும் வகையில், மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தும் இம்மேம்பால மின் கம்பங்களில், ஏகப்பட்ட தனியார் கேபிள் வடங்கள் கட்டப்பட்டுள்ளன.ஒவ்வொரு கம்பத்திலும், 10, 20 வடங்கள் கட்டப்பட்டு, வரைமுறையின்றி இஷ்டத்திற்கு தொங்கிக் கொண்டிருக்கின்றன. சில கம்பங்களில், வடங்களை மொத்தமாக சுற்றி, கட்டி தொங்கவிட்டுள்ளனர்.இப்படி தொங்கும் வடங்கள், காற்று அடித்தாலோ, மழை பெய்தாலே அறுந்து மேம்பாலத்தின் மீதும், ஜி.எஸ்.டி., சாலையிலும் விழுகின்றன. அதுபோன்ற நேரங்களில், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், வடத்தில் சிக்கி, கீழே விழுந்து விபத்தை சந்திக்கின்றனர்.அது குறித்து புகார் தெரிவித்தும், யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், தனியார் வடங்களை இழுத்து கட்டுவதால், ஒவ்வொரு கம்பமும் வலுவிழந்து சாய்கின்றன.இப்படியே போனால், அனைத்து கம்பங்களும் வலுவிழந்து சாலையில் சாய்வதற்கும், அதனால் பெரும் பிரச்னை ஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.அதுபோன்று பிரச்னை ஏற்படாமல் இருக்க, தனியார் கேபிள் வடங்களை அகற்றி, மின் கம்பங்களை பாதுகாக்க, மாநகராட்சி கமிஷனர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V Venkatachalam
ஜூன் 08, 2025 12:45

பி எஸ்என் எல் லில் திருடியது மட்டுமல்லாமல் மின் கம்பங்களில் ஓசியில் கட்டினான்கள்.கட்டு மரம் கண்டுக்காம ல் இருந்து சப்போர்ட் பண்ணியது. இப்பவும் அப்பிடியே தொடர்கிறது. நியாயமா மின் வாரியம் நடவடிக்கை எடுக்கணும். ஒரு பத்து இடத்தில் மின் ஊழியர்கள் இந்த கேபிள் வயரை அறுத்து விட்டால் போதும். எல்லாம் தானாகவே சரியாகிவிடும். இது ஒண்ணும் புதுசு இல்லை. இப்ப இருக்கிற ஓசி கவர்மெண்ட் நடவடிக்கை எடுக்குமா?


சமீபத்திய செய்தி