உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி :ஏணி சேதமடைந்ததால் அவதி

 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி :ஏணி சேதமடைந்ததால் அவதி

செய்யூர்:பச்சம்பாக்கம் கிராமத்தில், சேதமடைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் ஏணியை சீரமைக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். செய்யூர் அருகே பச்சம்பாக்கம் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பச்சம்பாக்கம் காலனி பகுதியில் குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் வாயிலாக, பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, தினமும் குழாய்களில் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டியை துாய்மைப்படுத்த அமைக்கப்பட்டு உள்ள இரும்பு ஏணி பராமரிப்பின்றி, கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து உள்ளது. இதனால், மேலே ஏறி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை துாய்மைப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சேதமடைந்துள்ள நீர்த்தேக்க தொட்டி ஏணியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: பச்சம்பாக்கம் ஊராட்சியில் மூன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளின் ஏணிகள் சேதமடைந்து உள்ளன. இவற்றை சீரமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டு, பச்சம்பாக்கம், நரியூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிய ஏணி அமைப்பதற்கான பணிகள் விரைவில் நடக்க உள்ளன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை