மேலும் செய்திகள்
லாரி மீது சரக்கு வாகனம் மோதி டிரைவர் படுகாயம்
28-Oct-2025
மறைமலை நகர்: காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தொழிற்சாலையில் இருந்து, மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு 'ஆக்சிஜன் லோடு' ஏற்றிக்கொண்டு, 'எய்ச்சர்' சரக்கு வாகனம் சென்றது. சிங்கபெருமாள் கோவில் அடுத்த சத்யா நகர் ஜி.எஸ்.டி., சாலையில் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம், சாலை நடுவே கவிழ்ந்தது.நல்வாய்ப்பாக, சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தவர், காயமின்றி தப்பினார். தகவலறிந்து வந்த மறைமலை நகர் போலீசார், சரக்கு வாகனத்தை மீட்டு போக்குவரத்தை சீரமைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மேலாளரே சரக்கு வாகனத்தை ஓட்டி வந்து, விபத்து ஏற்படுத்தியது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
28-Oct-2025