உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை விபத்தில் பெயின்டர் பலி

சாலை விபத்தில் பெயின்டர் பலி

சென்னை: சென்னை, தேனாம்பேட்டை, எம்.கே.ராதா நகரைச் சேர்ந்தவர் கணேஷ்குமார், 47; பெயிண்டர். நேற்று முன்தினம் இரவு, அண்ணா சாலை வழியாக கிண்டி நோக்கி, 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில் சென்றார். அண்ணா மேம்பாலத்திலிருந்து இறங்கிய போது, அவரது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையின் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த கணேஷ்குமார், சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவம் அறிந்துவந்த பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை