பாலுார் சாலை சந்திப்பில் வேகத்தடை அவசியம்
பவுஞ்சூர்,பவுஞ்சூர் அருகே பாலுார் கிராமத்தில், முதுகரை- - கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில் இருந்து பச்சம்பாக்கம், செம்பூர், அணைக்கட்டு, தண்டரை, தொண்டமநல்லுார் போன்ற கிராமங்களுக்குச் செல்லும் முக்கிய சாலையின் சந்திப்பு உள்ளது.இச்சாலை சந்திப்பில் இருசக்கர வாகனம், கார், பேருந்து மற்றும் லாரி என, தினசரி நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.சாலை சந்திப்பில் வேகத்தடை இல்லாததால், வாகன ஓட்டிகள் அவ்வப்போது விபத்துக்குள்ளாகின்றனர்.சாலை சந்திப்பு அருகே உள்ள மதுக்கடைக்கு வரும் மதுபிரியர்கள், தங்களது வாகனங்களை சாலையிலேயே விட்டுச் செல்கின்றனர். மேலும், அப்பகுதியில் செயல்படும் கல்குவாரிகளில் இருந்து ஜல்லி, மணல், எம்-சாண்ட் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிவேகமாக செல்கின்றன. இதனால், இச்சாலை சந்திப்பில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.எனவே, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை சந்திப்பில் வேகத்தடை அமைத்து, விபத்துகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.