மேலும் செய்திகள்
தொட்டியில் விழுந்த கன்று குட்டி மீட்பு
01-Dec-2024
செங்கல்பட்டு: செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில், பழைய திருமலா திரையரங்கம் உள்ளது. இந்த திரையரங்கம் பயன்பாடின்றி, பல ஆண்டுகளாக பூட்டப்பட்டு உள்ளது.இது தற்போது பாழடைந்து குடி மையமாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், மது அருந்த சென்ற நபர், சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தார்.இந்நிலையில் நேற்று காலை, திரையரங்கின் உட்புறத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது.இதைப் பார்த்த பொதுமக்கள், செங்கல்பட்டு தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை திறந்த போது, உள்ளே இருந்த மர்ம நபர்கள் வெளியே ஓடினர்.தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று பார்த்த போது, மின்சார ஒயர்களில் உள்ள செப்புக் கம்பிகளை எடுக்க, மர்ம நபர்கள் ஒயர்களுக்கு தீ வைத்து எரித்தது தெரிந்தது. இது குறித்து, செங்கல்பட்டு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.
01-Dec-2024