உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரயில் நிலையம் அருகே குப்பை அகற்ற பயணியர் கோரிக்கை

ரயில் நிலையம் அருகே குப்பை அகற்ற பயணியர் கோரிக்கை

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகே குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்ற வேண்டுமென, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை மார்க்கத்தில், சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை, சுற்றுப்பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி சென்னை, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.மேலும், சென்னையில் இருந்து சிங்கபெருமாள் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வேலைக்காகவும், பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கும் வந்து செல்கின்றனர்.இந்த ரயில் நிலையம் அருகில் உள்ள காலி இடத்தில், கடந்த சில நாட்களாக குப்பை கொட்டப்பட்டு, கடும் துர்நாற்றம் வீசுகிறது.இதனால், இந்த வழியாக செல்லும் ரயில் பயணியர் அவதிப்படுகின்றனர்.எனவே, பாதிப்பை ஏற்படுத்தும் இந்த குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

veeramani
ஜூலை 12, 2025 10:43

தென் தமிழ்நாட்டின் வாசகர் கருத்து சென்னை அரியாவில் வசிக்கும் அனைத்து மக்களும் சுயநல வாதிகள். ரயில்வே துறை ரயில்களை இயக்குவதுதான் தொழில். சிங்கபெருமாள்கோயில் கிராம நிர்வாகம்தான் குப்பைகளை அகற்றவேண்டும். ஒரே ஒரு கேள்வி. அங்கு வசிக்கும் மக்கள்தான் குப்பைகளை ரயில்நிலையம் அருகில் வீ சியிருக்கவேண்டும். பின்னர் ஏன் ரயில் நிர்வாகத்தை குறை சொல்கின்றனர் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை