குப்பை கிடங்கான நிழற்குடை சீரமைக்க பயணியர் கோரிக்கை
திருப்போரூர்:குப்பை குவிந்து மோசமான நிலையிலுள்ள நிழற்குடையை பராமரிக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் அடுத்த இள்ளலுார் ஊராட்சி, பெரியார் நகர் பேருந்து நிறுத்தத்தில், பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. அம்மாப்பேட்டை, நெல்லிக்குப்பம், கூடுவாஞ்சேரி வழியாகச் செல்லும் பேருந்துகள் இங்கு நின்று செல்லும். இந்நிலையில், இந்த பேருந்து நிழற்குடை பராமரிப்பு இல்லாமல், குப்பை அதிக அளவில் குவிந்துள்ளது. சுவர் மற்றும் பயணியர் அமரும் இடங்கள் அசுத்தமாக உள்ளன. அதனால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணியர் இந்த நிழற்குடையை பயன்படுத்துவது இல்லை. இதனால், 'குடி'மகன்களின் திறந்தவெளி மதுக்கூடமாகவும், சமூக விரோதிகளின் புகலிடமாகவும் நிழற்குடை மாறியுள்ளது. சுத்தமாக இல்லாததால், நிழற்குடை இருந்தும் பயணியர் சாலையோரம் வெயிலிலும், மழையிலும் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, பயணியர் நிழற்குடையில் குவிந்துள்ள குப்பையை அகற்றி, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.