உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமண்டூரில் அரசு விரைவு பஸ் விபத்து சிறு காயங்களுடன் பயணியர் தப்பினர்

மாமண்டூரில் அரசு விரைவு பஸ் விபத்து சிறு காயங்களுடன் பயணியர் தப்பினர்

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, மாமண்டூர் பகுதி சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அரசு விரைவு பேருந்து விபத்துக்குள்ளானது.இதில், சிறிய காயங்களுடன் பயணியர் உயிர் தப்பினர்.சென்னை, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து 50 பயணியருடன், நாகர்கோவில் நோக்கி அரசு விரைவு பேருந்து புறப்பட்டுச் சென்றது.செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பகுதியில், திண்டிவனம் நோக்கி லாரி ஒன்று சென்றது.அப்போது, எதிர்பாராத விதமாக, சாலையை கடக்க முயன்ற கார் மீது மோதாமல் இருக்க, லாரி சட்டென வலதுபுறம் சென்றதால், அரசு பேருந்து மீது உரசியது.அதனால், கட்டுப்பாட்டை இழந்த அரசு விரைவு பேருந்து, சாலை ஓரத்தில் நின்ற டிராவல்ஸ் வேன் மீது மோதியது.இந்த விபத்தில், 10க்கும் மேற்பட்ட பயணியர், சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற படாளம் போலீசார், காயமடைந்த பயணியரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்தால், சென்னை - -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி