மேலும் செய்திகள்
5 துணை பி.டி.ஓ.,க்களுக்கு செங்கையில் பதவி உயர்வு
06-Nov-2024
திருப்போரூர்,:செங்கல்பட்டு மாவட்டத்தில், ஜி.எஸ்.டி., சாலையில் பிரபல நகராட்சி யாகவும், வருவாய் கோட்டமாகவும் மதுராந்தகம் விளங்குகிறது.இங்கு, அரசு மருத்துவமனை, நீதிமன்றம், ஏரி காத்த ராமர் கோவில்ஆகியவை உள்ளன.அதேபோல, சமயக்குரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில், அரசு அலுவல கங்கள் மற்றும் வணிக மையமாக திருக்கழுக்குன்றம் விளங்குகிறது.அதேபோல், ஆன்மிக நகரமாகவும், சட்டசபை தொகுதி தலைமையிடமாகவும், நுாற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்களை கொண்டதாகவும், திருப்போரூர் விளங்குகிறது.சிறப்பு பெற்ற இப்பிரதான மூன்று ஆன்மிக நகரங்களை இணைக்கும் விதத்தில், தற்போது சாலை விரிவாக்கம்செய்யப்பட்டு, நல்ல சாலை வசதியும் உள்ளது.இச்சாலை வழியே நேரடி பேருந்து வசதி இல்லை. இதனால், செங்கல்பட்டு சென்று, பின் மதுராந்தகத்திற்கோ, திருப்போரூருக்கோ செல்லவேண்டியுள்ளது.இந்த வழித்தடத்தில்நேரடி பேருந்து வசதி ஏற்படுத்தினால், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பல கிராம மக்கள் பயனடைவர்.எனவே, முக்கியத்துவமான இச்சாலையில், நேரடி பேருந்து சேவை துவங்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
06-Nov-2024