கூவத்துார் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடையின்றி பயணியர் அவதி
பவுஞ்சூர்:கூவத்துாரில், கிழக்கு கடற்கரை சாலை பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாமல், பயணியர் அவதிப்படுகின்றனர்.கூவத்துார் பஜார் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில், பேருந்து நிறுத்தம் உள்ளது.இது கூவத்துார், நெடுமரம், கானத்துார் போன்ற, 10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான பேருந்து நிறுத்தமாக உள்ளது.சென்னை, புதுச்சேரி போன்ற வெளியூர்களுக்கு செல்வோர், பள்ளி கல்லுாரிகளுக்குச் செல்லும் மாணவ - மாணவியர் என, தினமும் ஏராளமானோர் கூவத்துார் பேருந்து நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால், வெயில் மற்றும் மழைக்காலத்தில் முதியவர்கள், நோயாளிகள் சிரமப்படுகின்றனர்.துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கூவத்துார் பேருந்து நிறுத்தம் பகுதியில நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.