மேலும் செய்திகள்
ஊராட்சி அலுவலகத்திற்கு புது கட்டடம் கட்டப்படுமா?
14-Oct-2025
சித்தாமூர்: கீழ்வசலை கிராம நிர்வாக அலுவலக கட்டடம் பழுதடைந்து கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுவதால், அலுவலகத்தில் அமர மக்கள் அச்சப்படுகின்றனர். சித்தாமூர் அடுத்த கீழ்வசலை கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலம் செயல்பட்டு வருகிறது. மேல்வசலை, கீழ்வசலை, நீலமங்கலம், ஒரங்காவலி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் நிலம், குடியிருப்பு, வருமானம், சாதி உள்ளிட்ட சான்றிதழ்கள், அரசின் நலத்திட உதவிகளுக்கு தேவையான சான்றிதழ்களை பெற்று வருகின்றனர். இந்த அலுவலகத்தில் கிராம வருவாய் கணக்குகள், நிலப் பதிவேடு, வருவாய் வசூல், சான்றிதழ், நில உரிமை தொடர்பான பதிவேடு உள்ளிட்ட ஏராளமான வருவாய்த்துறை சார்ந்த பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. கிராம நிர்வாக அலுவலக கட்டடம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இன்றி கட்டடம் பழுதடைந்து மேல் தளத்தில் உள்ள கான்கிரீட் பூச்சிகள் பெயர்ந்து விழுவதால் அலுவலகத்தின் உள்ளே அமர மக்கள் மற்றும் அதிகாரிகள் அச்சப்படுகின்றனர். மழை காலங்களில் கட்டடத்தில் மழை நீர் கசிந்து கிராம வருவாய் கணக்கு பதிவேடுகளை பாதுகாப்பாக பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. துறை சார்ந்த அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலக கட்டடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
14-Oct-2025