செங்கல்பட்டு மாவட்டத்தில் 34 தடத்தில் மினி பஸ் இயக்க...அனுமதி: 25 ஆண்டுகளுக்குப் பின் கிராமங்களுக்கு சிற்றுந்து இயக்கம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 34 வழித்தடங்களில்,'மினி பஸ்' எனும் சிற்றுந்துகள் இயக்க, தனியாருக்கு அனுமதி ஆணை வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து மாவட்டத்தில், 25 ஆண்டுகளுக்குப் பின், சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.தமிழகம் முழுதும், கடந்த 1999ம் ஆண்டு, நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு, சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. அதன் பின், கிராமங்களுக்கு இயக்கப்பட்ட சிற்றுந்துகள், கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டன.செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.மாவட்டத்தில் பெரும்பாலான கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் முறையாக இயக்கப்படாததால், கிராமவாசிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.மாவட்டத்தில், நகர்ப்புறங்களில் இருந்து கிராமங்களுக்கு, ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன.இந்த ஆட்டோக்களில், சட்ட விதிகளுக்கு புறம்பாக, 10க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் செல்கின்றனர். கிராமங்களுக்குச் செல்லும் ஆட்டோக்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி, பலர் படுகாயமடைகின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.இதையடுத்து, கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் சிற்றுந்துகள் இயக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, புதிய சிற்றுந்து திட்டம் குறித்து, தமிழக அரசிதழில், கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி வெளியிடப்பட்டது.இதுகுறித்து மாவட்டத்தில், கடந்த டிசம்பரில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, கிராமங்களுக்கு சிற்றுந்துகள் அதிகமாக இயக்க வேண்டும் என, கருத்து தெரிவித்தனர்.இதையேற்று, 50 வழித்தடங்களில் சிற்றுந்துகள் இயக்கும் புதிய திட்டத்திற்கு, தமிழக அரசு கடந்த ஜன., 24ல் அனுமதி அளித்துள்ளது.சிற்றுந்துகள் இயக்குவதற்கு அனுமதி பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கு, மாவட்ட அரசிதழில், கடந்த பிப்., 12ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் செங்கல்பட்டு, தாம்பரம், சோழிங்கநல்லுார் ஆகிய வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 34 வழித்தடங்களுக்கு, 103 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் அருண்ராஜ் முன்னிலையில், சிற்றுந்துகள் கோரிய விண்ணப்பங்கள் குலுக்கல் முறையில் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டன.இதில், 34 வழித்தடங்களுக்கான அனுமதி ஆணையை உரிமையாளர்களுக்கு, கலெக்டர் வழங்கினார். மேலும், புதிய வழித்தடங்கள் கண்டறிந்து, அந்த இடங்களுக்கு சிற்றுந்துகள் செல்வதற்கான வழிகளை ஏற்படுத்த வேண்டும் என, போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.சிற்றுந்துகள் இயக்க உரிமையாளர்களுக்கு, 90 நாட்கள் அனுமதி வழங்கப்படுகிறது. மே 1ம் தேதி முதல், சிற்றுந்துகள் இயங்கும். மாவட்டத்தில், 16 புதிய வழித்தடங்களுக்கு, வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
வழித்தடங்கள் விபரம்
* செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம்1. வித்யாசாகர் கல்லுாரி- உதயம்பாக்கம் வரை2. ஆஞ்சநேயர் கோவில் புரந்தவாக்கம் - மகேந்திரா வேல்டு சிட்டி3. நீலமங்கலம் பள்ளி சந்திப்பு சாலை - காட்டாங்கொளத்துார் சாலை சந்திப்பு4. காலவாக்கம் ஓ.எம்.ஆர்., சாலை - நெம்மேலி அரசு சுகாதார கேர் சென்டர்5. தண்டரை சந்திப்பு சாலை - அனுமந்தபுரம் அகோர வீரபத்திரன் கோவில்6. ஆசான் கல்லுாரி சந்திப்பு சாலை-வீராணம் சந்திப்பு சாலை (திருக்கழுக்குன்றம் பைபாஸ்)7. செங்கல்பட்டு கலெக்டர் ஆபீஸ்-நடராஜபுரம் சந்திப்பு சாலை8. ராட்டினம் கிணறு பேருந்து நிறுத்தம் - தெற்குபட்டு9. கூடுவாஞ்சேரி பஸ் நிலையம்-மறைமலைநகர் காவல் நிலையம்10. செங்கல்பட்டு பஸ் நிலையம்-மகேந்திரா வேர்ல்டு சிட்டி11. அய்யனார் கோவில் சந்திப்பு-வேடந்தாங்கல் கூட்டு ரோடு12. மேல்மருத்துார் - கீழ் அத்திவாக்கம்.13. திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம்-பாக்கம்14. திருக்கழுக்குன்றம் மலையடிவாரம்- இ.சி.ஆர்., புதுப்பட்டினம் பஸ் நிலையம்15. திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம்-தண்டரை கூட்டு ரோடு16. திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகர்-பொன்பதர்கூடம்17. கொத்திமங்கலம் சந்திப்பு-வெங்கப்பாக்கம்.18. மதுராந்தகம் பஸ் நிலையம்-கள்ளபிரான்புரம்* தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகம்19. கேம்ப் ரோடு சந்திப்பு-நல்லம்பாக்கம்20. மாம்பாக்கம்-குமுலி21. தாம்பரம் பஸ் நிலையம்-திருநீர்மலை22. மண்ணிவாக்கம்-நடராசம்பட்டு23. கூடுவாஞ்சேரி-நல்லம்பாக்கம் சந்திப்பு24. மண்ணிவாக்கம்- ஏ.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரி (சட்டமங்லம்)25. மண்ணிவாக்கம்-நடுவீரப்பட்டு26. குரோம்பேட்டை ரயில் நிலையம்-மாடம்பாக்கம்27. கலைஞர் நுாற்றாண்டு பஸ் முனையம்- கூடுவாஞ்சேரி* சோழிங்கநல்லுார் வட்டார போக்குவரத்து அலுவலகம்28. சோழிங்கநல்லுார் சிக்னல்-ஈச்சங்காடு சிக்னல்29. காமாட்சி மருத்துவமனை-பல்லாவரம்30. நன்மங்கலம்-வெற்றி தியேட்டர் குரோம்பேட்டை31. கோவிலம்பாக்கம்-குரோம்பேட்டை32. நாராயணபுரம்-மேடவாக்கம் கூட்டு ரோடு33. கேம்ப் ரோடு சந்திப்பு-நல்லம்பாக்கம்34. தாம்பரம் பஸ் நிலையம்-திருநீர்மலை