உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜமாபந்தியில் பட்டா கேட்டு மனு

ஜமாபந்தியில் பட்டா கேட்டு மனு

மதுராந்தகம்:மதுராந்தகம் தாலுகாவில் ஜமாபந்தி நிகழ்ச்சி, தீர்வாய அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான ரம்யா தலைமையில் நடந்தது.செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று, வையாவூர் உள்வட்டத்திற்கான கிராமங்களிலிருந்து பட்டா மாற்றம், பட்டா திருத்தம், இலவச வீட்டு மனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, குடிநீர், சாலை வசதி, அரசு புறம்போக்கு நிலங்களை மீட்பது, மகளிர் உரிமைத் தொகை, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 120க்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றன.இதில், வீட்டுமனை பட்டா கேட்டு, 50 மனுக்கள் வந்தன.இந்நிகழ்வில், மதுராந்தகம் பொறுப்பு வட்டாட்சியர் ராஜேஷ், வையாவூர் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர், பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !