உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தி.மு.க., கவுன்சிலர்கள் மனு

தி.மு.க., கவுன்சிலர்கள் மனு

மதுராந்தகம், மதுராந்தகம் நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது. அதில், வார்டு பகுதிகளில் மழைநீர் கால்வாய், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.ஆனால், 1, 10, 12, 14 , 16 , 18 மற்றும் 22வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்களின் பகுதிகளில் தொடங்கப்பட்ட பணிகள், கிடப்பில் போடப்பட்டுள்ளது.சில பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், பணிகள் துவங்கப்படாமல் உள்ளன.அதனால், வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், மக்களின் அத்தியாவசிய தேவை கருதி, வார்டு கவுன்சிலர்கள் தங்களின் கோரிக்கை மனுவை, நகராட்சி கமிஷனர் அபர்ணாவிடம் அளித்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட அவர், இதுகுறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கிடப்பில் போடப்பட்ட பணிகள், மீண்டும் துரித வேகத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி