உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீரராகவன் ஏரியை காப்பாற்றுக மாநகராட்சி கமிஷனரிடம் மனு

வீரராகவன் ஏரியை காப்பாற்றுக மாநகராட்சி கமிஷனரிடம் மனு

குரோம்பேட்டை:குரோம்பேட்டை மக்கள் விழிப்புணர்வு மையத்தின் தலைவர் சந்தானம் தலைமையில், தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தரை, நேற்று முன்தினம் சந்தித்த நலச்சங்கத்தினர், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.இது குறித்து, சந்தானம் கூறியதாவது:வீரராகவன் ஏரியில் தண்ணீர் இருந்தால் தான், குரோம்பேட்டையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் இருக்கும். இந்த ஏரி வற்றினால், தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடும்.பாழாகிவிட்ட ஏரியை சீரமைக்க வேண்டும். 28வது வார்டில், ஒரு கால்வாயை கூட துார் வாரவில்லை. பாலாஜி மருத்துவமனை, ரேலா மருத்துவமனை மற்றும் அக்கார்ட் ஹோட்டல் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவு நீர், நியூ காலனி குழாயில் விடுவதாக புகார் வந்துள்ளது. அதை தடுக்க வேண்டும்.அதேபோல், ரேலா, பாலாஜி மருத்துவமனை வளாகத்தில் ஆய்வு செய்து, ஓ.எஸ்.ஆர்., நிலத்தை கண்டறிந்து கையகப்படுத்தி, அதில் பூங்கா அமைக்க வேண்டும்.குரோம்பேட்டை ஸ்டேஷன் சாலையில், மாநகராட்சி கடைகள் உள்ளன. இச்சாலை குறுகலாக உள்ளதால், ஒவ்வொரு நாளும் நெரிசல் அதிகரிக்கிறது.அதனால், ஸ்டேஷன் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, கமிஷனரிடம் முன்வைத்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக, கமிஷனர் உறுதியளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !