உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிணற்றில் விழுந்த பன்றி உயிரிழப்பு

கிணற்றில் விழுந்த பன்றி உயிரிழப்பு

செங்கல்பட்டு:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மேலைமையூர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் பன்றித்தொல்லை அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை இதே கிராமத்தை சேர்ந்த ரவி,50. என்பவரின் வீட்டில் உள்ள குடிநீர் கிணற்றில் பன்றி விழுந்து உயிரிழந்தது. அப்பகுதி மக்கள் பன்றி வளர்ப்போரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து செங்கல்பட்டு தாலுகா போலீசார், அவர்களை சமாதான படுத்தினர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: செங்கல்பட்டு நகராட்சி ராம்பாளையம் பகுதியை சேர்ந்த சிலர் மேலைமையூர், ஆலப்பாக்கம், வல்லம் பகுதிகளில் உள்ள தெருக்களில் பன்றிகளை விட்டு செல்கின்றனர். இந்த பகுதியில் பன்றியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை