உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை தொகுதி நிதியில் திட்டப்பணிகள் துவக்கம்

செங்கை தொகுதி நிதியில் திட்டப்பணிகள் துவக்கம்

செங்கல்பட்டு, செங்கல்பட்டில், குடிநீர், சாலை, மழைநீர் கால்வாய் பணிகள் செய்ய, எம்.எல்.ஏ., தொகுதி நிதியிலிருந்து 69 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. செங்கல்பட்டு நகராட்சியில், குடிநீர் பணி, சாலை வசதி, மழைநீர் கால்வாய் மற்றும் பழவேலி சுடுகாடு மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யுமாறு, நகரவாசிகள் செங்கல்பட்டு தி.மு.க.,- - எம். எல்.ஏ., வரலட்சுமியிடம் கோரிக்கை வைத்தனர்.இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு சட்டசபை தொகுதி நிதியின் கீழ், 2024-25ம் ஆண்டிற்கு, குடிநீர் பணிக்கு 21 லட்சம் ரூபாயும், சாலை மற்றும் மழைநீர் கால்வாய் பணிகள் செய்ய, 27 லட்சம் ரூபாய். பழவேலக சுடுகாட்டை மேம்படுத்த 21 லட்சம் ரூபாய் என, 69 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கலெக்டருக்கு, எம்.எல்.ஏ., வரலட்சுமி பரிந்துரை செய்தார்.இப்பணிகளை செயல்படுத்த, நகராட்சி நிர்வாகத்திற்கு கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார். மேற்கண்ட பணிகளுக்கு கடந்த ஜன,, 21ம் தேதி டெண்டர் விடப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்களிடம் பணி ஆணை வழங்கப்பட்டது. தற்போது, பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது என, நகராட்சி பொறியாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை