உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பிளாஸ்டிக் குழாய்கள் தீப்பற்றி எரிந்து சேதம்

பிளாஸ்டிக் குழாய்கள் தீப்பற்றி எரிந்து சேதம்

மறைமலை நகர், மறைமலை நகரில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் குழாய்கள் தீப்பற்றி எரிந்தன. மறைமலை நகர் நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இதில் ஆறு வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. விடுபட்ட 15 வார்டுகளிலும் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிதாக பாதாள சாக்கடை அமைக்க, கடந்த ஓராண்டாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக, மறைமலை நகர் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள காலி இடத்தில், பிளாஸ்டிக் குழாய்கள் அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், நேற்று அதிகாலை 3:45 மணியளவில், இந்த புதிய பிளாஸ்டிக் குழாய்கள் தீப்பற்றி எரிந்தன. இதைப் பார்த்த அங்கிருந்தோர், மறைமலை நகர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர். இதில், 200க்கும் மேற்பட்ட 10 அடி நீளம் கொண்ட பிளாஸ்டிக் குழாய்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து மறைமலை நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை