உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பிளஸ் 2 மாணவர் தற்கொலை

பிளஸ் 2 மாணவர் தற்கொலை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த, எச்சூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் சதீஷ், 17, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்தார். கடந்த சில நாட்களாக மாணவர் உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை அப்பகுதி வனத்தில், புங்க மரத்தில் துாக்குப்போட்டு இறந்திருப்பதை, அங்குள்ளவர்கள் பார்த்தனர். மாமல்லபுரம் போலீசார் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !