புது டாஸ்மாக் எதிர்த்து பா.ம.க., ஆர்ப்பாட்டம்
மறைமலைநகர்,மறைமலைநகர் நகராட்சி 17வது வார்டு கீழக்கரணையில், புதிதாக டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.குடியிருப்புகளுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை அருகில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், செங்கல்பட்டு மத்திய மாவட்ட பா.ம.க., சார்பில் நேற்று, டாஸ்மாக் கடை அமைக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுமுகம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட பா.ம.க.,வினர் பங்கேற்றனர்.