மேலும் செய்திகள்
ஷேர் ஆட்டோ கவிழ்ந்து பள்ளி மாணவியர் காயம்
27-Oct-2024
மாமல்லபுரம்: மாமல்லபுரம் போலீஸ் துணை கோட்டத்தில், பொதுமக்கள் மற்றும் சாலை விபத்தில் இறந்தோர், பாதிக்கப்பட்டோர் குடும்பத்தினர் நிவாரணம் பெறுவது குறித்து, போலீசார் நேற்று மாமல்லபுரத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் பேசியதாவது:விபத்து இல்லாத நிலையை உருவாக்குவதே, எங்கள் நோக்கம். வாகனம் ஓட்டும்போது, அலட்சியத்தை தவிர்த்து, சாலை விதிகளை பின்பற்ற வேண்டும்.மது அருந்தி வகனம் ஓட்டுவது, மொபைல் போனில் பேசியவாறு சிக்னலை மீறுவது உள்ளிட்ட குற்றங்களுக்கு, ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவேண்டும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் பேசியதாவது:சாலை விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினர், இறப்புச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் ஆகியவற்றை அளித்தால், ஆறு மாதங்களில், காவல் துறை சார்பில் இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்படும்.அதே ஆவணங்களை கொண்டு, நீதிமன்ற வழக்குத் தொடர்ந்து, 60 - 70 லட்சம் ரூபாய் வரை, இழப்பீடு பெறவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.மாமல்லபுரம் அனைத்து பெண்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி பேசியதாவது:பெண்கள் கைபேசியை வரைமுறையுடன் பயன்படுத்த வேண்டும். தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.பெண்ணின் கைப்படத்தை மார்பிங் செய்து வெளியிடுவது அதிகரிக்கும் சூழலில், குற்றங்களுக்கு எதிராக துணிச்சலாக பெண்கள் செயல்படுவது அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.பின், விபத்து ஏற்படுவதற்கான காரணங்கள், அதை தவிர்ப்பது குறித்து, வீடியோ திரையிடப்பட்டது.
27-Oct-2024