உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொழிலதிபர் தாக்கப்பட்ட விவகாரம் ஆடிட்டரிடம் போலீசார் விசாரணை

தொழிலதிபர் தாக்கப்பட்ட விவகாரம் ஆடிட்டரிடம் போலீசார் விசாரணை

பெரும்பாக்கம்:சென்னை, ஈஞ்சம்பாக்கம், ஹனுமன் நகர், 2வது தெருவை சேர்ந்தவர் வீரமணி, 43; தொழிலதிபர். இவரது தொழில் கணக்குகளை, பெரும்பாக்கம், நேசமணி நகர், 2வது தெருவை சேர்ந்த ஆடிட்டர் முரளிதரன் என்பவர் நிர்வகித்து வந்துள்ளார்.வீரமணி தன் தொழிலை விரிவுபடுத்துவதற்காக, ஆடிட்டர் முரளிதரனிடம் பெற்ற, 12 லட்சம் ரூபாயை, உரிய தேதியில் திருப்பித் தரவில்லை.இந்நிலையில், தொழில் கணக்குகளை சரிபார்க்க, தன் வீட்டிற்கு வீரமணியை அழைத்த முரளிதரன், தான் கொடுத்த பணத்தை கேட்டு தகராறில் ஈடுபட்டார்.ஒரு கட்டத்தில், வீட்டில் இருந்த சிலருடன் சேர்ந்து, வீரமணியை தாக்கியுள்ளார். வலி தாங்காமல் துடித்த வீரமணி, தன் உறவினர் மகாலிங்கம் என்பவரிடம், 13 லட்சம் ரூபாயை கொண்டு வர செய்து, அதனை முரளிதரனிடம் கொடுத்துள்ளார்.இருப்பினும், வீரமணி மற்றும் மகாலிங்கத்தின் ஏ.டி.எம்., கார்டுகள், மொபைல் போன்களை பறித்த முரளிதரன், மகாலிங்கத்திடம், 1.20 கோடி ரூபாய்க்கு பத்திரம் எழுதி வாங்கிக்கொண்டு, வீரமணியை கேளம்பாக்கத்தில் உள்ள சகோதரி வீட்டில் விட்டுச் சென்றார்.புகாரின்படி, பெரும்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து, வீரமணி, மகாலிங்கத்திடம் பறிமுதல் செய்த கார்களை மதுராந்தகத்தில் மீட்டனர். அவற்றை வைத்திருந்த மதுராந்தகத்தை சேர்ந்த தயாநிதி, 36, சிலம்பரசன், 37, ஆகியோரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.இந்நிலையில், பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு நேற்று வந்த ஆடிட்டர் முரளிதரனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள சிலரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை