உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இடிந்து விழும் நிலையில் பொற்பனங்கரணை நிழற்குடை

இடிந்து விழும் நிலையில் பொற்பனங்கரணை நிழற்குடை

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்டது, பொற்பனங்கரணை ஊராட்சி. இங்கு, 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் வெளியூருக்கு வேலைக்கு செல்வோர் பயன்பெறும் வகையில், ஒரத்தி- - எலப்பாக்கம் செல்லும் சாலையில், பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.தற்போது, போதிய பராமரிப்பு பணி மேற்கொள்ளாததால், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, பயணியர் நிழற்குடை பயன்பாட்டில் இல்லை. வெயில், மழையில் வெளியே நின்று, பேருந்தில் ஏறி பயணம் செய்கின்றனர்.இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, நிழற்குடையை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !