உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் 3.59 லட்சம் பேருக்கு பொங்கல் தொகுப்பு டோக்கன்

செங்கையில் 3.59 லட்சம் பேருக்கு பொங்கல் தொகுப்பு டோக்கன்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், பொங்கல் தொகுப்பு வழங்க, ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கார்டுதாரர்களுக்கு, தலா ௧,௦௦௦ ரூபாய், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்குகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள 841 ரேஷன் கடைகளில், 4.30 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளனர். இதில், 3 லட்சத்து 59 ஆயிரத்து 993 பேருக்கு, பொங்கல் தொகுப்பு மற்றும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.பயனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க, ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக டோக்கன் வழங்கும் பணி துவங்கி, வரும் 13ம் தேதி வரை நடக்கிறது.இத்திட்டத்தில், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை கார்டுதாரர்கள், பொருளில்லா கார்டுதாரர்கள் தவிர்த்து, மற்றவர்கள் பயன்பெறலாம் என, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை