உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 8 ஆண்டாக திறக்கப்படாத நுாலகம் பூரியம்பாக்கம் வாசகர்கள் அவதி

8 ஆண்டாக திறக்கப்படாத நுாலகம் பூரியம்பாக்கம் வாசகர்கள் அவதி

சித்தாமூர்:சித்தாமூர் அருகே பூங்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட பூரியம்பாக்கம் கிராமத்தில், எட்டு ஆண்டுகளுக்கு முன் கிராமவாசிகளின் பயன்பாட்டிற்காக நுாலகம் அமைக்கப்பட்டது.ஆனால், தற்போது வரை நுாலகர் நியமிக்கப்படாமல் போதிய புத்தகங்கள், மேஜை, நாற்காலி வசதிகள் இல்லாததால், நுாலகம் திறக்கப்படாமல் பூட்டியே உள்ளது.மேலும், நுாலக கட்டடத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்தவில்லை. நுாலகத்தை திறக்க பலமுறை மனு அளித்தும், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, கிராமவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.இந்நிலையில், செயல்படாத நுாலகத்திற்கு 2020 - 21ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 40,000 ரூபாயில் பழுது பார்க்கும் பணி நடந்தது.பழுது பார்த்தல் பணி முடிந்து, நுாலகம் செயல்பட துவங்கும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்த்த நிலையில், தற்போது வரை நுாலகம் செயல்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, கிராமவாசிகளின் நலன் கருதி மின்சார வசதி ஏற்படுத்தி, நுாலகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ